இலங்கையின் முதலாவது தமிழ் இணையத்தொடர் Trip to hell இன் பாடல் வெளியீடு

0
182

இலங்கையின் முதலாவது தமிழ் இணையத்தொடர் Trip to hell இன் பாடல் வெளியீடு

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் வரிசையில் தனித்துவமும் தரமும் மிளிர்கின்ற ஒரு பேரெழுச்சி!
TRIP TO HE’LL

Capital Visual Production தயாரித்துள்ள இந்த இணையத் தொடரினை
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார்; இலங்கை தமிழ் தொலைக்காட்சித்துறையில் தேசிய விருதுகள் பலவற்றை பெற்ற பிரபல ஊடகவியலாளர் சியாவுல் ஹஸன்.

இலங்கையின் முதலாவது தமிழ் திகில் இணையத்தொடர் “Trip to Hell” இன் பாடல் மற்றும் மற்றும் Trailer ஆகியன எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகின்றன.

லைசியம் இசைக்குழுவின் இசையமைப்பில் பாடல் வரிகளை எழுதியுள்ளார் பிரபல கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின்.

பொத்துவில் அஸ்மின் பாடல் பற்றி குறிப்பிடும்பொழுது..

இலங்கையில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் இணையத் தொடரின் பாடலினை நான் எழுதியுள்ளேன்.

தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதிவரும் நான் இணையத் தொடருக்கு

எழுதியுள்ள முதல் பாடல் இதுவாகும்.

இந்த தொலைக்காட்சி தொடரின் இயக்குனர் சியாவுல் ஹஸன் அவர்கள் இலங்கை தொலைக்காட்சியில் பல வெற்றிப்படைப்புக்களை தந்தவர்.
2008 ஆம் ஆண்டு நான் பாடலாசிரியராக அறிமுகமாகிய இசை இளவரசர்கள் என்ற தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சியை இயக்கியவர். இலங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேசிய,சர்வதேச தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டி நிகழ்ச்சிகளை இயக்கிய பெருமைக்குரியவர் அவரின் இயக்கத்தில்

லைசியம் இசைக்
குழுவின் இசையில் கல்லூரி நட்பு பற்றிய கலக்கலான பாடலாக பாடல் உருவாகியுள்ளது.

இந்த பாடல் இளைஞர்களின் முன்னோடி, உலக தமிழர்களின் உள்ளம் கவர்ந்த விஞ்ஞானி Dr. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் நினைவு தினத்தன்று எழுதப்பட்ட பாடல் என்பதால் “கலாம்” என்ற பெயர்

 பாடல் முழுவதும் வருமாறு பாடலை வித்தியாசமாக யாத்துள்ளேன்.

பாடலை இலங்கையில் புகழ்பெற்ற இளம் பாடகர்களான சுதர்சன்,சிரிவத்சலா ராமநாதன்,ரோய் ஜக்சன், யதுநந்தினி ஆகியோர் இணைந்து மிகச்சிறப்பாக பாடியுள்ளனர்” என்றார்.

இந்த இணையத்தொடர் இலங்கை தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here