பகிரங்க சவால் ! நிரூபித்தால் 10 லட்சம் அண்பளிப்பு

0
19

பகிரங்க சவால் ! நிரூபித்தால் 10 லட்சம் அண்பளிப்பு

இதற்கான பதில் கிடைத்தால் 10லட்சத்தை சன்மானத்தை அதில் கலந்து கொண்டு அதனை ஆமோதித்த அமிரலி எம்பி அவர்களுக்கும், அதனை அங்கீகரிப்பது போன்று நடந்துகொண்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் இர்பான் அவர்களுக்கும், தவறான கருத்தை தெரிவித்த தவம் அவர்களுக்கும் இந்த சன்மானத்தை வழங்குவேன் என்று உறுதிகூறுகின்றேன்..!
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் பின்னர் மொத்த வாக்கில் ஒரு வேட்பாளரும் 50%த்தை தாண்டாது விட்டால், போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுக்கும் மத்தியில் ஆகக்கூடுதலான வாக்குகளை எடுத்த இரண்டு வேட்பாளர்களை போட்டியாளர்களாக தெரிவு செய்துவிட்டு, மற்ற அத்தனை வேட்பாளர்களின் வாக்குகளையும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கணக்கில் எடுக்கப்பட்டதன் பின், அந்த நிராகரிக்கப்பட்ட அத்தனை வேட்பாளர்களின் வாக்குகளுக்குள்ளும் இருந்தே 2,3ம் தெரிவு வாக்குகள் உண்டா என்று பார்க்கப்படும் இதுதான் தேர்தல் ஆணையாளரால் சொல்லப்பட்ட விடயம்.
ஆனால் தவம் அவர்கள் சொல்லுகிறார் வெற்றிவேட்பாளர்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தோல்வியடைந்த அல்லது நிராகரிக்கப்பட்ட  3ஆம்,4ஆம் வேட்பாளர்களின் வாக்கு சீட்டிலிருந்துதான் 2ஆம், 3ஆம் தெரிவு வாக்குகள் உண்டா என்று பார்க்கப்படும் என்றும், 3ஆம், 4ஆம் வேட்பாளர்கள் தவிர்ந்த மற்ற அனைத்து வேட்பாளர்களினதும் வாக்குகளிலிருந்து தெரிவு வாக்குகள் பார்க்கப்படமாட்டாது, அந்த வாக்குகள் அனைத்தும் தூக்கிவீசப்படும் வாக்குகள் என்று தவம் அடித்துச் சொல்லுகிறார். இந்த தவறான கூற்றை ஒரு எம்பியானவரும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஏற்றுக்கொண்டதுபோல் நடந்து கொண்ட விடயமானது மிகவும் ஏளனத்துக்குறியதென்றே கூறவேண்டியுள்ளது.
இது பொறுப்பு வாய்ந்த விடயம் என்பதாலும், இப்படியான தவறான விளக்கங்கள் மக்களுக்கு அழகுழப்பத்தை ஏற்படுத்தும் என்பதாலும், மிகவும் பொறுப்புவாய்ந்த ஊடகத்தினூடாக இது சொல்லப்ட்டதாலும். இதற்கு அவர்கள் பிழையை ஒத்துக்கொண்டு சரியான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.
அல்லாது விட்டால் இதுசம்பந்தமாக நான் பகிரங்க விவாதத்துக்கு வருவதற்கும் தயாராகவே இருக்கின்றேன். அப்படி அவர்கள் பகிரங்க விவாதத்துக்கு வந்து அவர்கள் கூறியதுதான் சரியென்று நிரூபித்தால் அவர்களுக்கு நான் பத்து லட்சம் ரூபாய்க்களை சன்மானமாக வழங்குவேன் என்றும் கூறுகின்றேன்..
எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here