97 வயது விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
147

97 வயது விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

By Mathivanan Maran | Published: Wednesday,

October 11, 2019, 15:58

2019-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 97 வயது மிக மூத்த விஞ்ஞானி ஜான் குட்எனஃப் உள்ளிட்ட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அறிவியல், இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. Sponsored Banana Island in… Mansion Global மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, வில்லியம் கேலின், பீட்டர் ராட்கிளிப், கிரெக் செமன்சா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்கிற ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்லஸு, சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மிசெல் மேயார் மற்றும் டிடியர் குயல்ஸ் ஆகியோருக்கு நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here