நயன்தாராவை விடாமல் துரத்தும் தொழிலதிபர்.. பல கெட்டப்பை பார்த்து ஷாக்கான நடிகைகள்..

0
42

தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் சவால் விட வந்து விட்டார் சரவணா ஸ்டார் முதலாளி சரவணா அருள். இவர் சரவணா ஸ்டாரின் அனைத்து விளம்பர படத்திலும் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இவர் அதிரடியாக தமிழ் சினிமாவில் கால்தடம் பதிக்கவுள்ளார். 30 கோடி செலவில் விளம்பர படத்தை இயக்க ஜேடி-ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் புக்செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஒரு வருடமாக அலைந்து வருகிறார் தொழிலதிபர். முதலில் நயன்தாராவை கதாநாயகியாக கேட்டபோது அவர் முகம் சுழிக்கும் வகையில் நான் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். இதனை தொடரந்து விளம்பரங்கில் இவருடன் நடித்த தமன்னா மற்றும் ஹன்சிகாவையும் கதாநாயகியாக கேட்டுள்ளார்.

அதற்கு தமன்னா விளம்பரம் வேறு, படம் வேறு நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது ஹன்சிகா தான் இந்த படத்தில் நடிக்க போகிறார் என்று அனைவரும் எதிரிபார்த்த நிலையில், தற்போது ஹன்சிகா நான் இந்த படத்தில் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ஹன்சிகா என்னை பற்றி வரும் செய்திகளை நம்பாதீர்கள் என ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.

இதற்கு பிறகும் மறுபடியும் நயன்தாராவையே இந்த படத்திற்க்கு ஹீரோயினியாக கேட்டுள்ளார்களாம். அதற்காக அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கவும் தயாராக உள்ளாராம். இதற்கு நயன்தாரா என்ன சொல்லப்போகிறார் என தெரியவில்லை. இதனால் நயன்தாராவை மட்டும் விடாமல் துரத்தி கொண்டே இருகிறார் தொழிலதிபர்.

ஆனால் இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பையே மாற்றியுள்ளார் சரவணன் அருள். இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here